மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து லண்டன் செல்லும் ஜெர் ஏர்வேஸ் போயிங் ரக விமானம் செல்ல தயாராக இருந்தது. இந்த விமானத்தை செலுத்த விமான ஓட்டுனர் மற்றும் பணியாளர்கள் வந்தபோது விமானத்தின் ஓட்டுனர் இருப்பிடத்தில் ஆந்தை இருப்பதை கண்டறிந்தனர்.
இது குறித்து தகவலறிந்த சக ஊழியர்கள் ஆந்தையை பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர். 14 மணி நேரம் பறந்து செல்லக்கூடிய போயிங் ரக விமானத்திற்குள் ஆந்தை எப்படி புகுந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.