டெல்லியில் பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார்.
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார். டெல்லி விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருதலைவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்தநிலையில், இந்தியா, வங்கதேசம் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.