டெல்லியின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் காற்று மாசு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாயகட்ட அளவை எட்டியுள்ளதால் சுகாதார அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களும் பதிவெண் அடிப்படையில் மட்டுமே இயங்க அனுதிக்கப்படுகின்றன. காற்றுமாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 5 மடங்கு வரை அதிகரித்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் காற்று மாசு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்