பொதுமக்கள் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று முதல் காலை 7 மணிமுதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக காலை 8 மணி முதல் 10 மணிவரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரையும் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தற்போது நெரிசல் மிக்க நேரங்களில் ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இருந்ததைப் போல, மீண்டும் பழையபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.