சென்னையில் 5 ஆவது நாளாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றும் படி நிர்பந்திக்க கூடாது, வாடகைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் லாரி உரிமையாளர்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் சென்னை துறைமுகத்தில் இருந்து ஒரு நாளைக்கு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கண்டெய்னர்கள் வரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.