சென்னையில் விமான சேவை பாதிப்பு

பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பெங்களூரு, மும்பை செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில்,போகி பண்டிகையை யொட்டி பழைய பொருட்களை, பொதுமக்கள் கொளுத்தியதால் புகை மூட்டம் ஏற்பட்டது. பனி மூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பெங்களூரு, புனே, திருச்சி, மும்பை, அந்தமான் செல்லும் விமானங்களின் சேவை 2 மணி நேரம் தாமதமானது. சென்னை – பெங்களூரு, சென்னை – மும்பை செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Exit mobile version