அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வரும் 13ஆம் தேதி சசிகலா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து மின்னணு சாதனங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை அமலாக்கப்பிரிவு பதிவு செய்தது. சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவருக்கும் தொடர்புடையதாக 3 வழக்குகளும், சசிகலா மீது தனியாக இரண்டு வழக்குகள் என 5 வழக்குகள் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சசிகலாவை வரும் 13ஆம் தேதி ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சிகள் அளித்த சாட்சியங்களின் விளக்கம் குறித்தும், நீதிபதிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.