அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சாதுக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லாஹ் தலைமையிலான சமரச குழுவும் சமரச பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. இந்தநிலையில் நேற்றையதினம் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களும் ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பின் சாதுக்களும் ஆலோசனை நடத்தினர். ராமர் கோயிலை விரைவாக கட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும், அதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த கூட்டத்தில் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

Exit mobile version