சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலர் கோலமாவு விற்பனை களைக்கட்டியுள்ளது.
மார்கழி மாதம் என்றாலே நம் நினைவில் வருவது கோலம் தான்.மார்கழி முதல் நாள் முதலே பெண்கள் அதிகாலையில் வாசலில் பெரிய கோலமிட்டு வண்ணமிடுவர். பொங்கல் பண்டிகையின் போது வாசல்களில் பொங்கல் பானை வரைந்து வர்ணம் பூசுவர். ஆத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கலர் கோலமாவு விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது. மஞ்சள், பச்சை சிகப்பு, நீலம், ஊதா, வெள்ளை, கருநீலம், ஆரஞ்சு போன்ற பல வண்ணங்களில் கோலமாவு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு 100 கிராம், 50 கிராம், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Discussion about this post