குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும், மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து டிசம்பர் 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version