அனைத்து மாநிலங்களிலும் ’தேசிய விவசாய சந்தை’ அமைக்கப்படும்

மாநிலங்களில் விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட தேசிய விவசாய சந்தை அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய நிதி நிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அதில் மாநிலங்களில் விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட தேசிய விவசாய சந்தை அமைக்கப்படும் என்றும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பூஜ்ய முதலீட்டில் விவசாயம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அதேபோல், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பணிகள் நடைபெறும் என்றும், பசுமை தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி 33 ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். மேலும் 5 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறைஇல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்றார்.

Exit mobile version