அனைத்து மாநிலங்களிலும் தேசியக் குடிமக்கள் பதிவேடு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

தேசியக் குடிமக்கள் பதிவேடு முறை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொக்காரோவில் பாஜக பொதுக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறையை நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். தங்கள் மண்ணில் உள்ள வெளிநாட்டவர் யார் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ராமர் கோவில் கட்டப்படும் என நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து ராமர் கோவில் கட்டுவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version