போலி ஆதார் அட்டை மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி நூதனமுறையில் ஏமாற்றி வந்த 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் குரங்கு சாவடி பகுதியில் நேற்று அதிகாலை வீடுபுகுந்து ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ஒரு விடுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர்கள் 7 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 7 பேரும் போலியான ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமம் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.. அதனை வீட்டு உபயோக பொருட்கள் கடையில் கொடுத்து , மாதத்தவணையில் வாங்குவர்.. 30 லட்சத்திற்கும் மேல் , ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் என பலவற்றையும் வாங்கிவிட்டு, காணாமல் போய்விடுவர்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மோசடி செய்து ஏமாற்றி வந்த இந்த கும்பல் சொன்ன தகவல் போலீசாரையே அதிர்ச்சியடையச்செய்துள்ளது.. இந்த கும்பலை கைதுசெய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.