கூடுதலாக தரம் உயர்த்தப்பட கூகுல் லென்ஸ் செயலி

பொருட்கள் மற்றும் புகைப்படங்களில் உள்ள இந்திய மொழி வார்த்தைகளை மொழிபெயர்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள் லென்ஸ் செயலி. வார்த்தைகளை உள்ளீடு செய்யாமலேயே மொழிபெயர்ப்பது எப்படி?

கூகுள் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய புகைப்பட அடையாளத் தொழில்நுட்பமே ‘கூகுள் லென்ஸ்’ . இது ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் உள்ள கேமராக்களின் திறனை அடிப்படையாகக் கொண்டு கூகுள் தேடலை மேம்படுத்தும் தொழில்நுட்பமாக வடிவமைக்கப்பட்டது.

கூகுள் லென்ஸ் செயலி உள்ள ஒரு கைபேசியின் கேமரா மூலம் ஒரு பொருளைப் பார்க்கும் போது, அந்தப் பொருளின் வடிவம், அதில் உள்ள பார்கோடு, கியூ.ஆர்.கோடு, லேபிள்கள், வாசகங்கள் ஆகியவற்றைக் கொண்டு கூகுள் தேடுபொறியில் பிற தகவல்களைத் தேட கூகுள் லென்ஸ் உதவியது. இதற்காக கூகுள் இமேஜ் மற்றும் கூகுள் அசிஸ்டன்ஸ் – ஆகிய பிற செயலிகளுடன் கூகுள் லென்ஸ் செயலியானது இணைந்து இயங்கியது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கூகுள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் கூகுள் லென்ஸ் சேவையில் இன்னும் சில புதிய மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ஒரு மெனு கார்டில் உள்ள உணவுகளைப் புரிந்து கொண்டு, அவற்றில் சரியான உணவைப் பயனாளருக்குப் பரிந்துரைப்பது, பலர் கூடி சாப்பிடும் போது பில் தொகையை பகிர்வது, டிப்ஸைக் கணக்கிடுவது, சமையல் குறிப்புகளை குரல் வடிவத்திற்கு மாற்றுவது – போன்ற உணவகம் சார்ந்த பல மேம்பாடுகள் கூகுள் லென்சில் அப்போது செய்யப்பட்டன.

அதனோடு கூகுள் லென்ஸ் செயலியானது மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடும் என்று அப்போதுதான் அறிவிக்கப்பட்டது. அதன்படி சில ஐரோப்பிய மொழிகளை மொழி பெயர்க்கும் வசதி கடந்த மே மாதம் கூகுள் லென்ஸ் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரை மொழி பெயர்ப்பு செய்ய விரும்புகிறவர்கள் அந்த சொற்களை தட்டச்சு செய்ய வேண்டிய தேவை இருந்து வந்த நிலையில் அந்தத் தேவையை இந்த புதிய
சேவை தர்த்தெறிந்தது.

ஒரு பொருளில் உள்ள வார்த்தைகளை கூகுள் லென்ஸ் தொழில்நுட்பம் உள்ள கைபேசி மூலம் புகைப்படம் எடுப்பதன் மூலம் இந்த மொழிபெயர்ப்பு சேவையை எளிமையாகப் பயன்படுத்தலாம். அப்படியாக மொழிபெயர்க்கப்பட்ட சொற்களை குரல் மூலமாகவும் கேட்கலாம். இப்படியாக மொழிபெயர்க்கப்பட்ட சொற்களில் ஏதாவது சில சொற்கள் புரியவில்லை என்றால் அந்த சொல்லின் மீது தொடுவதன் மூலம் அந்த சொல்லின் பொருளை கூகுள் தேடுபொறியில் தேடவும் முடியும்.

இந்நிலையில், கூகுள் லென்ஸில் இந்திய மக்களுக்குப் பெரிதும் பயன்படும் புதிய மேம்பாடு ஒன்றை, இன்று டெல்லியில் நடைபெற்ற கூகுளின் வருடாந்திரக் கூட்டத்தில் அறிமுகம் செய்யாப்பட்டுள்ளது. அதாவது கூகுள் லென்சின் மொழிபெயர்ப்பு சேவையை தற்போது தமிழ், மராத்தி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

எனவே இனி இந்திய மொழிச் சொற்களையும் எளிதில் மொழிபெயர்க்கவும், கூகுள் தேடலில் உள்ளிடவும் முடியும். மேற்கத்திய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் கூகுள் லென்ஸ் இந்தியாவிலும் தடம் பதிக்குமா? – என்பதை இந்த மொழி பெயர்ப்பு சேவையின் வெற்றிதான் உறுதிப்படுத்தும்.

Exit mobile version