நாட்டின் 7 மாநிலங்களில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையின் அளவு கணிசமாக குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையின் அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் மழைக்காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவியதாகவும், இதனால் நிலத்தடிநீர் ஆதாரமும் சரிவை சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவையே மழையின் அளவு குறைந்ததற்கு காரணம் என்றும், குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தில், சில தென்மாநிலங்களில் தினமும் மிகவும் குறைந்த அளவில் மழை பெய்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.