50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 8 ஆண்டுகளிலேயே அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை, 8 ஆண்டுகளிலேயே அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை துடியலூரை அடுத்த அசோகபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, 4 கோடியே 30 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை அடுத்து, நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வழக்கமாக பொதுமக்கள் தான் அதிகாரிகளை தேடி போவார்கள், ஆனால், தற்போதைய அதிமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளே பொது மக்களை தேடிச் சென்று தேவைகளை பூர்த்தி செய்கின்றனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அந்தப் பகுதியில் 2 ஆயிரம் கோடியில் செய்யப்பட்டுள்ள பல்வேறு நல திட்டங்கள் பற்றிய விவரங்களை விளக்கி கூறினார்.

Exit mobile version