4 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட செவிலியர்களுக்குப் பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 2 ஆயிரத்து 721 செவிலியர்கள், ஆயிரத்து 782 கிராம சுகாதாரச் செவிலியர்கள், 96 மருத்துவ அலுவர்கள் உட்பட 5 ஆயிரத்து 224 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு தொலைதூரக் கண்ணியல் வலைத்தளம் மற்றும் 32 காணொலிக் கண் பரிசோதனை மையங்களையும் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version