2ஜி விவகாரத்தில் ஸ்டாலின், சாதிக் பாட்சாவை சந்தித்தது உண்மை- ரேகா பானு

2ஜி விவகாரத்தில் ஸ்டாலின், சாதிக் பல்வாவை சந்தித்தது உண்மை என்றும், சாதிக் பாட்சா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது ரேகா பானு வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதிக் பாட்சா இறந்த 8 வருடங்களில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கூறினார். தனது கணவர் மரணத்தில் சரியான நீதி கிடைக்கவில்லை என்றும், தாங்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய நிறுவனத்தை திமுக அமைச்சர்கள் பறித்துக் கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். சாதிக் பாட்சாவின் நினைவு நாளன்று பத்திரிகையில் கொடுத்த விளம்பரத்தை பார்த்த திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். இதே நிலை நீடித்தால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என வருத்துடன் கூறிய ரேகா பானு, சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளித்தாக கூறினார்.

Exit mobile version