2023-ம் ஆண்டு வெள்ளி கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், வெள்ளி குறித்து ஆய்வு செய்வதற்காக 2023-ம் ஆண்டு மத்தியில் விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டு உள்ளது.
இந்த விண்கலம் 100 கிலோ எடையும், 500 வாட்ஸ் திறனும் கொண்டது என்றும், வெள்ளி கிரகத்தில் இருந்து குறைந்தபட்சமாக 500 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 60 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றி வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு விண்வெளி முகமைகள், ஆராய்ச்சிக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்து உள்ளது.