சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் சோலார் ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட்டது.
தனியார் அமைப்புகள் இணைந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 20 பள்ளிகளில் சோலார் மின்சாரம் மூலம் செயல்படும் ஸ்மார்ட் வகுப்புகள் துவக்கப்பட்டது. அதில் முதலாவதாக, சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சோலார் ஸ்மார்ட் வகுப்பு துவக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஜெகநாதன் கலந்து கொண்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை துவக்கி வைத்தார்.