16 மொழிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு

2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 மொழிகளில் நடத்தப்படும் என்றும், இதற்கு 8 ஆயிரத்து 754 செலவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 மொழிகளில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் செலவாகும் என செலவு நிதி குழு கணக்கிட்டு இருப்பதாகவும்
அவர் கூறியுள்ளார்.

Exit mobile version