தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும், பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. குறிப்பாக, உள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட11 மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.