இந்திய பங்குச் சந்தைகள் 10ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாபெரும் எழுச்சியை சந்தித்துள்ளன. இதனால் முதலிட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.
உள்நாட்டில் தொழில் தொடங்குவோர்களுக்கான வரி சலுகை அறிவிப்பை தொடர்ந்து இந்திய பங்கு சந்தைகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எழுச்சியை சந்தித்துள்ளன. பெரும் அளவில் முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருவதால் பங்குகளின் மதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு இரண்டாயிரம் புள்ளிகள் அதிகரித்து 38 ஆயிரத்து 100 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 600 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 300 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.