கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவற்றுக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபடவும், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்கவும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதகா தெரிகிறது.
திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி ஊர்வலங்களில் 25 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதுச்சேரி மாநில நிர்வாகம் இன்று வெளியிடும் என்றும், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.