கிருஷ்ணகிரியில் திடீர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பயிரிடப்பட்ட கீரை பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்துள்ள பூசாரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுகிய கால பயிரான கீரைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரங்களில் பெய்த திடீர் மழை மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக கீரை பயிர்கள் பெருமளவில் அழுகி சேதமாகி வருகின்றன.
இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.