சிவமோகா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பலத்த காற்றுடன் மழைபெய்து வருவதால் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். துங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் மைசூருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோதே பகுதியில் உள்ள ரயில் தண்டாவளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்படுள்ளது. போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.