வடமாநிலங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமாநிலங்களில் தொடர்பெய்து வரும் கனமழையில் சிக்கில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், பலகோடி ரூபாய் மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளாதாகவும் கூறப்படுகிறது. உத்ராகாண்டிலும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. விடாது பெய்யும் கனமழையால் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தலைநகர் டெல்லியிலும் பெய்த தொடர்மழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் கன மழையால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போது மழையின் தாக்கம் குறைத்து காணப்படுவதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Exit mobile version