விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடும் வறட்சி காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக செங்கல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சாத்தூரை அடுத்த செவல்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் இந்த செங்கல் சூளையை நம்பி வாழும் சூழ்நிலையில், போதிய மழை பெய்யாமல் வறட்சி நிலவுவதால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்ற ஆண்டை விட செங்கலின் விலையும் குறைந்துள்ளது எனக் கவலை தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள் தமிழக அரசு உதவ கோரிக்கை வைத்துள்ளனர்.