சென்னையில் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

சென்னையில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வடசென்னையில் தொற்றின் பரவல் அதிகமாக உள்ளதால், அங்கு கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தடுப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும், குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version