முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்த, ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிதியுதவி, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
தஞ்சாவூர் அருகே பாபநாசம் உத்தமனாத புரத்தில், தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சா அவர்களின் 165 வது பிறந்தநாள் விழாவையொட்டி, மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்த, ஏழை தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கபடும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார். நிதியுதவி கிடைக்கவில்லை என்றால் உடனடியாக மனுக்கள் பெறப்பட்டு பரீசிலனை செய்து, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.