வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, தேனி ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக வரும் 30ம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மிதமான மழையும்,
நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,
30ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.