இந்த 10 மாவட்ட மக்களும் உசாரா இருந்துக்கோங்க! கனமழை வர போகுதாம்…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நாளை பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்,

அடுத்த 24 மணி நேரத்திற்கு, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 13ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று தெரிவித்து இருக்கும் வானிலை ஆய்வு மையம், சென்னையில், ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என்று கூறியுள்ளது.

தெற்கு வங்க கடல், அந்தமான் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version