திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, கருணாநிதியின் படத்தை வைத்து குடியரசு தின விழா கொண்டாடிய திமுக கவுன்சிலரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
செங்கம் அருகே உள்ள பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. அப்போது, மகாத்மா காந்தி படத்திற்கு அருகே, திமுக தலைவர் கருணாநிதியின் படத்தை வைத்து திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, அரசு பள்ளி ஆசிரியை சந்திரகலா ஆகியோர் விழா நடத்தியுள்ளனர். தேசியக் கொடியேற்றும் போதும், கருணாநிதியின் படத்தை வைத்துள்ளனர். திமுக கவுன்சிலரின் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைக்காக போராடிய தலைவர்களின் படங்களை வைக்காமல், கருணாநிதியின் படத்தை வைத்து குடியரசு தினம் கொண்டாடுவதா..? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். குடியரசு தின விழாவில் கருணாநிதியின் படத்தை வைத்த திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, அரசு பள்ளி ஆசிரியை சந்திரகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.