ஏர்வாடி அருகே சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 510 கிலோ கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சட்டவிரோதமாக கடத்திச் சென்ற 510 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏர்வாடி புல்லந்தை கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் கடலோர காவல்படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அது வழி வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காரில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்த போது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தி சென்றது தெரியவந்தது. கடல் அட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட சம்சுதீன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version