காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதம் பச்சை பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பதினைந்து நாளாக நடைபெற்று வரும் அத்திவரதர் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டுச் செல்கின்றனர். இன்று பச்சைப்பட்டு உடுத்திய அத்தி வரதர் ,வண்ண பூக்களின் அலங்காரத்தோடு ரம்மியமாக பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அத்திவரதரை சேவித்து செல்கின்றனர். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் வரதரை தரிசனம் செய்தனர். இதுவரை 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அதிகாரிகள் என பலர் தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.