ஐஐடியில் படிப்பில் பலவீனமான மாணவர்களுக்கு புதிய வாய்ப்பு

ஐஐடிகளில் படிப்பில் பலவீனமாக இருக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் JEE மெயின் தேர்வுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்தாலும், நாட்டில் உள்ள 23 ஐஐடிக்களில் 13 ஆயிரத்து 500 பேர் மட்டுமே சேர்க்கை பெறுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 2 ஆயிரத்து 461 மாணவர்கள் கல்விச் சுமை, பொருளாதாரம் ஆகிய பல்வேறு காரணங்களால் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டுள்ளனர். பொதுவாக பி.டெக்., படிப்புக்களுக்கு 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் 3 ஆண்டுகளிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டு வெளியேறுவோருக்கு பி.எஸ்.சி., எஞ்சினியரிங் பட்டம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக குறைந்த கற்றல் திறன் உடையவர்களுக்கு 3ஆம் ஆண்டோடு வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் குறித்து ஆலோசிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Exit mobile version