ஐஐடி மாணவி தற்கொலை: காவல் ஆணையர், இணை ஆணையர் நேரில் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக காவல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளத்தின் கொல்லத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா கடந்த எட்டாம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவரின் தொந்தரவாலேயே பாத்திமா தற்கொலை செய்துகொண்டதாக அவரின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ள நிலையில், ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் சுதாகரன் ஆகியோர் ஐஐடி வளாகத்துக்குச் சென்று பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 22 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையே மாணவி தற்கொலைக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் பேராசிரியர் சுதர்சன் பத்மனாபன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஐடி நுழைவாயில் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version