சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக அவரது தாய், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரள மாநிலம் கொல்லத்துக்குச் சென்றுள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டியில் பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா கடந்த 8ம் தேதி விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால் பாத்திமா தற்கொலை செய்துகொண்டதாக ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாத்திமாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவர் பெற்றோர் தெரிவித்தனர். இது தொடர்பாக, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடியில் பேராசியர்கள், அலுவலர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பாத்திமாவின் தாய், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரள மாநிலம் கொல்லத்துக்குச் சென்றுள்ளனர்.