ஐஐடி மாணவர் ரிஷிக் ரெட்டி மாயமாகியுள்ளதாக தகவல் – மாணவன் கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை

சென்னை ஐஐடியில் பயிலும் ஆந்திராவை சேர்ந்த ரிஷிக் ரெட்டி என்ற மாணவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஐடியில் பிடெக் 4வது ஆண்டு படித்து வரும் ரிஷிக் ரெட்டி, வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த 27ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக விடுதியில் தகவல் தெரிவித்துவிட்டு சென்ற அவர், வீட்டிற்கு செல்லவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. ரிஷிக் ரெட்டியின் தந்தை, விடுதிக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் ஏற்கனவே ஊருக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரிஷிக் ரெட்டியுடன் படித்து வரும், சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Exit mobile version