தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அரசு சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஜூட் பைகளை பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சில டாஸ்மாக் கடைகள், பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள் அல்லது சில்வர் டம்ளர்களை பயன்படுத்த முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜனவரி 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் கண்டிப்பாக பிளாஸ்டிக் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ள அதிகாரிகள், விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால், பாரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.