ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தால் ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கில் மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் தான் எதிர்த்தரப்பு என்றார்.
இந்த வழக்கில் தம்மை எதிர்க்க மத்திய பா.ஜ.க அரசுக்கும், உத்தர பிரதேச பா.ஜ.க அரசுக்கும் துணிவு உள்ளதா என கேள்வி எழுப்பிய சுப்ரமணியன் சுவாமி, அவர்கள் எதிர்த்தால் ஆட்சியை கவிழ்த்துவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். அயோத்தி வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு வந்தால் வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.