தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிக்காவிட்டால் தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான்

தமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள நடிகர் விஷால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இயக்குநர் வசந்த பாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், அண்மையில் திரையரங்கில் வெளியான தமிழ் படங்கள் திரைப்படங்கள் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டதோடு, தயாரிப்பாளர் சங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். விஷால் தயாரித்துள்ள கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையப்பக்கத்தில் வெளியாகவில்லை என்று சுட்டிக்காட்டிய வசந்த பாலன், தமிழ் ராக்கர்ஸை கண்டுபிடிக்காவிட்டால், தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான் என வேதனையுடன் கூறினார். தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் செய்யவேண்டிய வேலையை செய்யாமல் மற்ற வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார் என்றும் அவர்  விமர்சித்தார் .

Exit mobile version