IAS,IPS நேர்காணல் தேர்விற்கு தகுதி பெற்றால் தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பயிற்சி மையம், IAS, IPS போன்ற மத்திய அரசு பணிகளுக்கு போட்டி தேர்வாளர்களின் தேவைகளை மேம்படுத்துவதை முதன்மையான குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி நிலையமானது ஒரு கல்வி முதல்வர், இரண்டு பேராசிரியர்கள், 30க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள், குளிரூட்டப்பட்ட 4 வகுப்பறைகள், 250 பேர் அமரக்கூடிய அளவில் கருத்தரங்க அறை, 30ஆயிரம் நூல்கள் அடங்கிய நூலகம், மாணவர்களிடையே ஏற்படும் குழப்பங்களை தீர்த்துக்கொள்ள wi-fi வசதியுடன் கூடிய 50 கணினிகள், 80 அறையுடன் கூடிய விடுதி, வல்லுனர்களால் முறைப்படுத்தப்பட்ட உணவு பட்டியல், மாற்றுத்திறனாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட கழிவறைகள் என பல்வேறு சிறப்பம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது.

எளிதில் பயணிக்ககூடிய வகையில் ராஜா அண்ணாமலைபுரம் பறக்கும் ரயில் நிலையத்திற்கு அருகிலும், மந்தைவெளி பேருந்து நிலையத்திற்கு இடையிலும், அடையாறு நதிக்கரையின் ஒரத்தில் பறவைகளின் சத்தத்தை மட்டுமே கேட்கும் வகையில் காற்றோட்டமான ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது.

பட்டியில் ஒதுக்கீடு அடிப்படையில், 245 முழுநேர உள்ளுறை பயிற்சியாளர்களும், காலை,மாலை என 100 பகுதிநேர பயிற்சியாளர்களும் பயனடைகின்றனர். இதுவரை இங்கு பயிற்சி பெற்று வெற்றியடைந்த அதிகாரிகளை பட்டியலிட்டால் சொல்லிக்கொண்டே போகலாம்.

பிரத்தியேகமாக கண் பார்வையற்ற மாணவர்களுக்கு தொடுதிறன் மூலம் அறிந்து கொள்ளும் வகையில்”Brail map மற்றும் Brail globe”களும் ,தொடுதிறன் புத்தகங்களும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் எளிமையாகக் கற்றுக் கொள்ள உதவி செய்யப்படுகிறது.

மேலும் இரண்டாம் கட்ட தேர்வில் வெற்றி பெற்று நேர்காணல் தேர்விற்காக டெல்லி செல்லும் மாணவர்களுக்கு பேருந்து, தங்கும் வசதி போன்றவைகளை ஏற்படுத்தி தருவதுடன் மூன்று மாதங்களுக்கு தலா 3ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் தமிழக அரசு வழங்கிவருகிறது.

பகுத்தறிவு பேசும் திமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கான பயிற்சி நிலையமானது, அண்ணா நகரில் அதுவும் வாடகையில் Bc, sc என இரு பிரிவினருக்கு தனித்தனியான கட்டிடங்களாக இருந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவற்றை ஒன்றிணைத்து கடந்த 2012 ல் ரூ.10.14 கோடி செலவில் பிரத்தியேகமாக துவங்கினார்.

தற்சமயம் பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை கருத்தில் கொண்டு தமிழக அரசானது 50 லட்ச ரூபாய் செலவில் மின்தூக்கி ஒன்றை தயார் செய்து வருகிறது.

அகில இந்திய போட்டித்தேர்வு பயிற்சி நிலையத்தில் இணைந்து பயன்பெறுவதற்கான முழு விவரங்களுக்கு www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

Exit mobile version