பேஸ்புக் user-அ நீங்க..கவனமா இருங்க..

சமூக வலைதளங்களில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆப்களில் பேஸ்புக்கும் ஒன்று.அண்மையில் வாஷிங்டனில் இருக்கும் ஒரு நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்திடம் location information service பற்றிய விவரத்தை பற்றி கேட்டிருந்தது.அதற்கு விளக்கமளித்து பேஸ்புக் நிறுவனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அந்த கடிதம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

தங்கள் இருப்பிடத்தை பயனாளர்கள் பகிர்ந்துக்கொள்வதன் மூலம் அருகில் இருக்கும் கடைகள், வணிக நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பயனாளர்களிடம் பகிர முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் இருப்பிடத்தை பகிர விரும்பாதவர்களின் தகவல்களையும் எங்களால் தெரிந்துக்கொள்ள முடியும் என்று பேஸ்புக் கூறியிருப்பது பேஸ்புக் பயனாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நண்பர்களால் ஒரே இடத்தில் இருப்பதாக டேக் செய்வதன் மூலம் பேஸ்புக்கால் உங்களின் இடத்தை அறிந்துக்கொள்ள முடியும்.

மேலும் பயனாளர்களின் இருப்பிடத்தை அறிந்துக்கொள்வதன் மூலம் பேஸ்புக் log in -ல் ஏதேனும் தவறு நடந்தால் பேஸ்புக் பயனாளர்களிடம் எங்களால் அறிவுறுத்தமுடியும் என கூறப்பட்டுள்ளது.உதாரணத்திற்கு லண்டனில் இருப்பவரின் கணக்கு, சிட்னியில் இருந்து  log in செய்யப்பட்டால் அந்த கணக்கு உரிமையாளருக்கு எங்களால் தகவல் பகிர location information service பயனுள்ளாதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் IP Address மூலமும் உங்களின் இருப்பிடத்தை பேஸ்புக் தெரிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version