வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற புதிய திட்டம் பின்லாந்து நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து நாட்டின் பிரதமராக சன்னா மரின் கடந்த மாதம் பதவியேற்றார். கூட்டணி கட்சியின் ஆதரவால் பிரதமரான அவர் தான் உலகின் “இளம் வயது பெண் பிரதமர்”களில் முதன்மையானவராக உள்ளார்.
அந்நாட்டில் நடைபெற்று வந்த தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரஅதிரடி முடிவுகளை எடுத்திருந்தார். சம்பள உயர்வு, மேம்பட்ட பணிச்சூழல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பணி நேரத்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வாரத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், தினமும் 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.இந்த 6 மணி நேரத்தை கணக்கிட்டால் வாரத்திற்கு 4 மட்டுமே வேலை செய்ய வேண்டும். இதனால் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.