பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போதிய மழையில்லாததால் கரும்பு வளர்ச்சி இல்லாமல், குன்றியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொங்கல் தினத்தன்று கரும்பு வைத்து கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில், பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள், விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த மரவபட்டியில் பல ஏக்கர்களில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் போதிய மழை இல்லாததால், கரும்பு வளர்ச்சி இல்லாமல், குன்றி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கரும்பின் விலை அதிகரித்தால் தான், கஜா புயலால் அடைந்த சேதத்தை சிறிதளவு ஈடு செய்ய முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.