அரசின் அறிவுரைகளை முறையாக பின்பற்றினால், எந்த வைரஸூம் தொற்றாது- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுகாதார பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, அமைச்சர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

Exit mobile version