ஆம்னி பேருந்துகளில் பட்டாசு எடுத்துச்சென்றால் உரிமம் ரத்து

இந்த வருட தீபாவளி வரும் நவம்பர் 6 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு வகையான தீபாவளி கொண்டாட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தீபாவளிக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக தமிழக அரசு சார்பில் 20,000-க்கும் அதிகமான பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனியார் ஆம்னி பேருந்துகளில் பட்டாசு கொண்டு சென்றால் அந்த பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநில போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பட்டாசு வெடிப்பது தீபாவளியின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. அதே நேரம் இந்த பட்டாசுகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுமதிக்கப்படாத வகையில் தான் பெரும்பாலும் எடுத்துச்செல்லப்படுகிறது. குறிப்பாக ஆம்னி பஸ்களில் ரகசியமாக எடுத்துச்சென்று விடுகிறார்கள்.

இப்படி செல்வதால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது என எச்சரித்துள்ள அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளில் பட்டாசுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

Exit mobile version