ராகுல் காந்தி பிரதமரானால், ஆறு மாதங்களுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக சக்தி என்னும் செயலி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று சக்தி செயலியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மக்களின் வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக குற்றம் சாட்டினார். இன்னும் நான்கு மாத காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார். ராகுல் காந்தி பிரதமரானால், ஆறு மாதங்களுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.