பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதற்கு ஸ்டாலினே பொருத்தமானவர் : முதலமைச்சர்

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதற்கு ஸ்டாலினே பொருத்தமானவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து, விரகனூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஒரு கட்சியின் தலைவர், எதிர்கட்சி தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் இங்கிதம் இல்லாமல் பேசுபவர் என்றும், அரசியல்வாதி ஒருவர், பொய் பேசுவதற்கு நோபல் பரிசு அளிக்கலாம் என்றால், அதை ஸ்டாலினுக்கு அளிக்கலாம் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

மதுரை சிந்தாமணி பகுதியில் முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், படித்த இளைஞர்களுக்கு, மத்திய அரசு அலுவலகங்களில் இடம் கிடைக்கவில்லை என்று கூறும் ஸ்டாலின், மத்திய அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, செய்ய தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம், சமநத்தம் பகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தோப்பூரில், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் வீடுகள் கொண்ட துணைக்கோள் நகரம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version